28
September, 2026

A News 365Times Venture

28
Monday
September, 2026

A News 365Times Venture

NEET: "நீட் ரகசியத்தை Daddy, son சொல்லணும்" – திண்டிவனம் மாணவி தற்கொலை விவகாரத்தில் இபிஎஸ் காட்டம்

Date:

நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க அரசை விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், “மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்கொலை

நேற்று தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட திமுகவின் நீட் ரகசிய அரசியல் நாடகம் குறித்து நான் பேசிய நிலையில், நாமும் மருத்துவர் ஆகிவிடலாம் என்கிற உயரிய லட்சியத்தோடு அல்லும் பகலும் படித்து வரும் மாணவர்கள் மத்தியில், ஆட்சிப்பொறுப்பற்று 4 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அவர்களுக்கு விடியா திமுக அந்த நீட் ரகசியத்தைச் சொல்லாமல், ரகசியம் இருப்பதாகப் பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களைக் குழப்பத்திலேயே வைத்திருக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசுதான் மாணவியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்ப வேண்டும்.

அந்த நீட் ரகசியத்தை #Daddy_son உடனடியாக சொல்ல வேண்டும். அப்படி இல்லை என்றால், திமுக பொய்தான் சொன்னது என்ற உண்மையை ஒப்புக்கொண்டு, இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ചോദ്യത്തിന് മറുപടിയില്ല; പകരം കഴുത്തറുക്കല്‍ ആംഗ്യം: അഫ്ഗാന്‍ വനിതാ മാധ്യമപ്രവര്‍ത്തകയോട് പാക് പ്രതിരോധമന്ത്രി

ന്യൂയോര്‍ക്ക്: അഫ്ഗാന്‍ വനിതകളോടുള്ള താലിബാന്‍ നയത്തെക്കുറിച്ച് ചോദിച്ച മാധ്യമ പ്രവര്‍ത്തകയോട് കഴുത്തറുക്കുന്നതിന്...

RTI-ல் சட்டம் – ஒழுங்கு நீக்கம் குறித்த அறிவிப்பு – திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு குறித்து...

IND Vs WI: భారీ స్కోర్ సాధించిన వెస్టిండీస్.. ఇండియా టార్గెట్ ఎంతంటే..

భారత్, వెస్టిండీస్ మధ్య తిరువనంతపురంలోని గ్రీన్‌ఫీల్డ్ ఇంటర్నేషనల్ స్టేడియంలో జరిగిన తొలి...

ಪದವಿಪೂರ್ವ ಶಿಕ್ಷಣ ಇಲಾಖೆಯಲ್ಲಿ ಅಧಿಕಾರಿಗಳ ಕೊರತೆ: ಸಾರ್ವಜನಿಕರು, ವಿದ್ಯಾರ್ಥಿಗಳಿಗೆ ತೊಂದರೆ ಆರೋಪ

  ಬೆಂಗಳೂರು, ಜೂ.27, 2026: ಪದವಿಪೂರ್ವ ಶಿಕ್ಷಣ ಇಲಾಖೆಯ ನಿರ್ದೇಶಕರ ಕಚೇರಿಯಲ್ಲಿ...