14
March, 2026

A News 365Times Venture

14
Saturday
March, 2026

A News 365Times Venture

Ranjith: "சாதியரீதியிலான வன்கொடுமைகளை அறிவீர்களா முதல்வரே?" – ஸ்டாலினிடம் பா.ரஞ்சித் கேள்வி

Date:

முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை குறிப்பிட்டு, “சாதியரீதியிலான வன்கொடுமைகளை அறிவீர்களா?” என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பா.ரஞ்சித் வெளியிட்டிருக்கும் X தளப் பதிவில், “தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறைச் சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதைத் தடுக்க அல்லது குறைந்தபட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புக்கொள்வீரா??? மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களே!!

தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி!” எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஸ்டாலின்

முதல்வரை நோக்கி பா.ரஞ்சித் கேட்டிருக்கும் கேள்வியைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

കരുതലിന്റെ കാതല്‍; വയനാട് ടൗണ്‍ഷിപ്പിലെ താമസക്കാര്‍ക്ക് സാധന സാമഗ്രികള്‍ വാങ്ങാന്‍ ഒരു ലക്ഷം വീതം

തിരുവനന്തപുരം: ഒരുക്കിയ വയനാട് ടൗണ്‍ഷിപ്പിലെ താമസക്കാര്‍ക്ക് കൂടുതല്‍ ധനസഹായവുമായി സംസ്ഥാന സര്‍ക്കാര്‍....

"தேர்தலில் போட்டியிடும்படி மோடியின் பிரதிநிதி என்னை சந்தித்தார்" – எம்.பி ஆக ஆசைப்படும் ஐ.எம்.விஜயன்

கேரளாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவைச் சேர்ந்த இந்தியக்...

War Effect : తెలంగాణలో వార్ ఎఫెక్ట్.. చరిత్ర సృష్టించిన విద్యుత్ శాఖ

తెలంగాణ రాష్ట్ర విద్యుత్ రంగం సరికొత్త చరిత్రను లిఖించింది. రాష్ట్ర చరిత్రలో...

ಕೆಂಪೇಗೌಡ ವೃತ್ತ (ಮಣಿಪಾಲ್ ಜಂಕ್ಷನ್) ಕಾಮಗಾರಿಗಳ ಪರಿಶೀಲಿಸಿದ ಸಂಸದ ಯದುವೀರ್

 ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,14,2026 (www.justkannada.in): ಮೈಸೂರು–ಕೊಡಗು ಲೋಕಸಭಾ ಕ್ಷೇತ್ರದ ಸಂಸದ  ಯದುವೀರ್ ಕೃಷ್ಣದತ್ತ...