10
March, 2026

A News 365Times Venture

10
Tuesday
March, 2026

A News 365Times Venture

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Date:

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில், கொல்கத்தா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.

சஞ்சய் ராய்

இந்த விவகாரத்தில் மேற்குவங்க அரசு உண்மையை மறைப்பதாகவும், குற்றவாளியை காப்பாற்ற முயன்றதாகவும் குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் எழுந்தன. நீதி கேட்டு மேற்குவங்க மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் எல்லாம் நடத்தினர்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் சீல்டா மாவட்ட நீதிமன்றம் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பு வழங்கியிருக்கிறார். பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் 64, 66 மற்றும் 103 (1) பிரிவின் கீழ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

சஞ்சய் ராய்
சஞ்சய் ராய்

விசாரணை தொடங்கி 57 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் நீதிபதியிடம் பேசியபோது, “நான் பொய்யாக சிக்க வைக்கப்பட்டுள்ளேன். நான் இதைச் செய்யவில்லை. இதில் ஒரு ஐ.பி.எஸ். சம்பந்தப்பட்டுள்ளார்” என்று கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் வரும் திங்கள் கிழமை வெளியாகும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಡಿಕೆಶಿ ಅತ್ಯಂತ ಯಶಸ್ವಿ ಅಧ್ಯಕ್ಷರು: ಪಕ್ಷ ಅಧಿಕಾರಕ್ಕೆ ತರುವುದೇ ಅವರ ಕನಸಾಗಿತ್ತು- ಸಚಿವೆ ಲಕ್ಷ್ಮೀ ಹೆಬ್ಬಾಳ್ಕರ್

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,10,2026 (www.justkannada.in): ಕೆಪಿಸಿಸಿ ಅಧ್ಯಕ್ಷರಾಗಿ ಡಿಕೆ ಶಿವಕುಮಾರ್ 6 ವರ್ಷ...

പശ്ചിമേഷ്യന്‍ സംഘര്‍ഷം; എല്‍.പി.ജി വിതരണം ഗാര്‍ഹിക ഉപഭോക്താക്കള്‍ക്കായി പരിമിതപ്പെടുത്തി, ഹോട്ടലുകള്‍ അടച്ചുപൂട്ടലിന്റെ വക്കില്‍

ന്യൂദല്‍ഹി: പശ്ചിമേഷ്യയിലെ സംഘര്‍ഷത്തെ തുടര്‍ന്ന് രാജ്യത്തെ ഹോട്ടലുകള്‍ അടച്ചുപൂട്ടലിന്റെ വക്കില്‍. ഗാര്‍ഹിക...

'உங்க எல்லாரையும் எம்.எல்.ஏ-வா பார்க்கணும்!' – விஜய் `அறிவித்த' 60 வேட்பாளர்கள்?! – முழு விவரம்!

விஜய்யிடம் பாஜக கூட்டணிக்காக பேசிக்கொண்டிருக்கிறது என்கிற தகவல் அரசியல் புயலை கிளப்பியிருக்கும்...

PM Kisan: రైతులకు గుడ్ న్యూస్.. పీఎం కిసాన్ 22వ విడత రిలీజ్ డేట్ ఫిక్స్.. ఆ రోజే ఖాతాల్లోకి

దేశంలోని అన్నదాతలకు ఆర్థిక సాయం అందించేందుకు కేంద్ర ప్రభుత్వం ప్రధానమంత్రి కిసాన్...