12
March, 2026

A News 365Times Venture

12
Thursday
March, 2026

A News 365Times Venture

Trump: “டிரம்ப் முடிவுகளால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்" -எச்சரிக்கும் உலக வங்கி

Date:

அமெரிக்காவைச் சேர்ந்த மீடியா நிறுவனம் ஒன்று, டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்பது தொடர்பாக சர்வே ஒன்றை எடுத்துள்ளது.

அதில் ‘டிரம்ப் பதவியேற்றப்பிறகு, மளிகை சாமான்கள், ரியல் எஸ்டேட், மருத்துவம் ஆகியவற்றின் கட்டணம், செலவு குறையுமா’ என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு வெறும் 20 சதவிகிதம் பேர் மட்டும் ‘நிச்சயம் குறையும்’ என்று பதில் அளித்துள்ளனர்.

மீதி 80 சதவிகிதம் பேர், டிரம்பின் மேல் நம்பிக்கை தெரிவிக்கவில்லை. இதில் டிரம்பின் ஆதரவாளர்களும் அவர்மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

உலக வங்கி என்ன சொல்கிறது?

2024-ம் ஆண்டு நடந்த அமெரிக்கத் தேர்தலில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை பிரச்னைகள் மிகவும் பெரிதாக பேசப்பட்டது. பெரும்பாலானவர்கள் பணவீக்கத்தில் டிரம்பின் ஆதரவாளர்களே அவரின் மேல் நம்பிக்கை தெரிவிக்கவில்லை என்றாலும், அவரின் ஆதரவாளர்கள் 60 சதவிகிதம் பேர், அவர் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

இந்த சர்வேயில், மூன்றில் ஒரு அமெரிக்கர்கள் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை சிறப்பாக கையாள்வார் என்று கூறியிருக்கின்றனர்.

டிரம்பின் ஆட்சியில் பொருளாதாரம் குறித்து அமெரிக்கர்கள் கூறியது ஒருபக்கம் இப்படியென்றால், இன்னொரு பக்கம், உலக வங்கி டிரம்பின் அதிரடி வரிகளால் உலக நாடுகளின் வளர்ச்சி பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது.

வரும் திங்கள்கிழமை அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்ப் உலக அளவிலான இறக்குமதிகளுக்கு 10 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்றும், கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் போதை மருந்துகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை தடுக்கும் வரை அந்த நாடுகளின் இறக்குமதிகளுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்றும், சீன பொருள்களின் இறக்குமதிகளுக்கு 60 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

டிரம்பின் இந்த முடிவுகளால் உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಜೋಡಿ ಕೊಲೆ:  ಅರೋಪಿಗೆ ಜೀವಾವಧಿ ಶಿಕ್ಷೆ, ದಂಡ ವಿಧಿಸಿದ ಮೈಸೂರು ಕೋರ್ಟ್

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,11,2026 (www.justkannada.in): ಜಮೀನಿನಲ್ಲಿ ವ್ಯವಸಾಯ ಮಾಡುವ ವಿಚಾರಕ್ಕೆ ಸಂಬಂಧಿಸಿದಂತೆ ತನ್ನ...

അമിത് ഷാ ചര്‍ച്ച ചെയ്യേണ്ടത് സ്പീക്കറുടെ ഭരണഘടനാവിരുദ്ധമായ പെരുമാറ്റം; രാഹുല്‍ ഗാന്ധിയെ കുറിച്ചല്ല: കെ.സി. വേണുഗോപാല്‍

ന്യൂദല്‍ഹി: ആഭ്യന്തരമന്ത്രി അമിത് ഷാക്കെതിരെ രൂക്ഷവിമര്‍ശനവുമായി എ.ഐ.സി.സി ജനറല്‍ സെക്രട്ടറി കെ.സി....

`4 தொகுதிகள்; 3-ல் உதயசூரியன் சின்னம்' – மதிமுக-வை சரிகட்டிய திமுக!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தி.மு.க கூட்டணிக்குள் வேகமெடுக்க...

American Airlines: జస్ట్ 30 సెకన్లు హెడ్‌ఫోన్స్ లేకుండా వీడియో ప్లే.. ఎయిర్‌లైన్స్ రూల్స్ బ్రేక్ చేసిన మహిళకు షాక్

అమెరికన్ ఎయిర్‌లైన్స్ ఫ్లైట్‌లో హెడ్‌ఫోన్స్ లేకుండా వీడియో ప్లే చేసిన మహిళను...