4
April, 2026

A News 365Times Venture

4
Saturday
April, 2026

A News 365Times Venture

வில்லிவாக்கம்: ஆதவ் அர்ஜுனாவுக்காக பிரசாரத்தில் ஈடுபட்ட தவெக-வினர்!

Date:

தவெக சார்பில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வேட்பாளராக களமிறங்குகிறார். இந்நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா தன்னுடைய தங்கையை பிரசாரத்திற்கு களமிறக்கியிருக்கிறார்.

Seetha Lakshmi

தவெக சார்பில் வில்லிவாக்கத்தில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தின நிர்வாகிகள் கூட்டம் நடந்திருந்தது. அந்தக் கூட்டத்தின் போதே ஆதவ் அர்ஜூனாதான் வில்லிவாக்கத்தில் போட்டியிடப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் அந்தக் கூட்டத்தில் பேசியிருந்த ஆதவ் அர்ஜூனா, ‘அடுத்த வாரத்திலிருந்தி வீடு வீடாக பிரசாரத்தை தொடங்கப் போகிறேன். என் சார்பில் என் தங்கை சீதா லெட்சுமியும் பிரசாரம் செய்வார்’ என தங்கையை மேடையிலேயே நிர்வாகிகளுக்கு அறிமுகமும் செய்து வைத்தார். மார்ச் 29 ஆம் தேதி விஜய் தனது 234 வேட்பாளர்களையும் அறிவித்தார்.

Seetha Lakshmi
Seetha Lakshmi

இதைத்தொடர்ந்து ஆதவ் அர்ஜூனாவும் மார்ச் 31 ஆம் தேதி முதல் தொகுதிக்குள் வீடு வீடாக பிரசாரம், தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம் என செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆதவ் முன்பு கூறியதைப் போல நேற்றிலிருந்து தனது தங்கையையும் தொகுதியில் களமிறக்கியிருக்கிறார். அவரும் வீடு வீடாக போய் அண்ணனுக்காக வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார். பெண்களின் வாக்குகளை கவர்வதற்காக ஆதவ் தனது தங்கையை பிரசாரத்துக்கு பயன்படுத்துவதாக கட்சி வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

'பெரம்பூரில் 52 வயது; திருச்சி கிழக்கில் 51 வயது!' – வேட்புமனுவில் குழப்பிய விஜய்?

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு...

Earthquake: ఢిల్లీలో భూకంపం.. ప్రాణ భయంతో వీధుల్లోకి పరుగులు పెట్టిన జనాలు..

దేశ రాజధాని ఢిల్లీతో పాటు ఉత్తర భారతదేశంలోని పలు రాష్ట్రాల్లో శుక్రవారం...

ಶಾಮನೂರು ಮೊಮ್ಮಗನ ವಿರುದ್ದ ತಿರುಗಿ ಬಿದ್ದಿದ್ದಾರೆ: ಬಿಜೆಪಿ ಗೆಲುವು ನಿಶ್ಚಿತ- ಶ್ರೀರಾಮುಲು

ದಾವಣಗೆರೆ,ಏಪ್ರಿಲ್,3,2026 (www.justkannad.in): ದಾವಣಗೆರೆಯಲ್ಲಿ ಶಾಮನೂರು ಶಿವಶಂಕರಪ್ಪ ಮೊಮ್ಮಗ ಕಾಂಗ್ರೆಸ್ ಅಭ್ಯರ್ಥಿ...

ശുദ്ധ അസംബന്ധം, കേരളത്തെ അപമാനിക്കാനുള്ള ശ്രമം; ആര്‍. ശ്രീലേഖയുടെ ലവ് ജിഹാദ് ആരോപണത്തില്‍ എ.എ. റഹീം

തിരുവനന്തപുരം: വട്ടിയൂര്‍ക്കാവ് ബി.ജെ.പി സ്ഥാനാര്‍ത്ഥി ആര്‍. ശ്രീലേഖയുടെ ലവ് ജിഹാദ് പരാമര്‍ശത്തില്‍...