25
February, 2026

A News 365Times Venture

25
Wednesday
February, 2026

A News 365Times Venture

SIR : “விதிமுறைகளுக்கு உட்பட்டு..!" – உச்ச நீதிமன்றத்தில் `வழக்கறிஞராக' மம்தா பானர்ஜி | Live Updates

Date:

உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு..!

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் நடைமுறைகளுக்கு எதிரான விவகாரத்தில் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 32 கீழ் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் விசாரணைக்கு வரும் நிலையில், மம்தா பானர்ஜியே தனது வழக்கிற்காக ஆஜராகி வாதங்களை முன்வைக்க உள்ளார்

மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சுய பதிவு விவரங்களில்,`நான் சட்டப் படிப்பை முடித்திருக்கிறேன். எனவே நீதிமன்றங்களில் வாதாடும் நடைமுறைகள் முழுமையாக தெரியும். உச்ச நீதிமன்றத்தின் மாண்புகள் குறித்த தகவல்களையும் முழுமையாக அறிந்து வைத்திருக்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கண்ணியத்துடன் நீதிமன்றத்தில் நடந்து கொள்வேன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மம்தாவின் குற்றச்சாட்டு

 மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், இந்த SIR நடவடிக்கை பா.ஜ.க-வின் திட்டம் எனவும், சிறுபான்மையினர், பா.ஜ.க கட்சிக்கு எதிரானோர்களிடமிருந்து வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “தேர்தல் ஆணையம், சிறு எழுத்துப்பிழை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான வாக்காளர்கள் போன்றவர்களை நீக்குகிறது. உயிரோடு இருப்பவர்களையும் இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறது” என்றக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

`சேகர்பாபு பேசினது சங்கடமா போச்சு; உடனே துணை முதல்வர்..'- தவெக மேடையில் பாடியது குறித்து வேல்முருகன்

சமீபத்தில் தவெக-வின் மூன்றாமாண்டு தொடக்க விழா மேடையில் பாடகர் வேல்முருகன் விஜய்யைப்...

ಸ್ವದೇಶಿ ಕರಕುಶಲ ವಸ್ತು ತಯಾರಿಕೆಗೆ ಉತ್ತೇಜನ ಅಗತ್ಯ:  ಸಚಿವ ಕೆ.ಹೆಚ್ ಮುನಿಯಪ್ಪ

ಬೆಂgಗಳೂರು ಗ್ರಾಮಾಂತರ, ಫೆಬ್ರವರಿ, 24,2026 (www.justkannada.in): ಕೇಂದ್ರ ಹಾಗೂ ರಾಜ್ಯ...

നുണയന്‍, ധൈര്യമുണ്ടെങ്കില്‍ യു.എസുമായുള്ള വ്യാപാര കരാര്‍ റദ്ദാക്കണം; പ്രധാനമന്ത്രിയെ വെല്ലുവിളിച്ച് രാഹുല്‍ ഗാന്ധി

ന്യൂദല്‍ഹി: പ്രധാനമന്ത്രി നരേന്ദ്ര മോദിക്കെതിരെ വീണ്ടും അതിരൂക്ഷ വിമര്‍ശനവുമായി ലോക്‌സഭാ പ്രതിപക്ഷ...