6
December, 2025

A News 365Times Venture

6
Saturday
December, 2025

A News 365Times Venture

பீகார் தேர்தல்: குறைத்துகொண்ட நிதீஷ்; தக்கவைத்த சிராக் பஸ்வான் – பாஜக கூட்டணியில் தொகுதி உடன்பாடு

Date:

சூடுபிடித்த பீகார் தேர்தல்!

பீகார் சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் இரண்டு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் வழக்கம்போல் பா.ஜ.கவும், ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அக்கூட்டணி தங்களது தொகுதி பங்கீட்டை முதல் அணியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து அறிவித்துள்ளார்.

அதில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பா.ஜ.கவும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 தொகுதியில் போட்டியிடும். சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக 29 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதர எஞ்சிய கட்சிகளான ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா மற்றும் ஹிந்துஸ்தான் அவான் மோர்ச்சா ஆகிய கட்சிகள் தலா 6 தொகுதியில் போட்டியிடுகின்றன. இக்கட்சிகள் அதிக தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தர்மேந்திர பிரதான்

குறைத்துக்கொண்ட நிதீஷ் குமார்!

ஆனால் இறுதியில் 6 தொகுதியில் போட்டியிட சம்மதித்துள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதியில் போட்டியிட்டது. ஆனால் இம்முறை அதனை 101 ஆக குறைத்துக்கொண்டுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி 5 தொகுதியில் போட்டியிட்டு ஐந்து தொகுதியிலும் வெற்றி பெற்றது. அந்த 5 தொகுதியில் இருந்து தங்களுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்று சிராக் பஸ்வான் கோரிக்கை விடுத்திருந்தார். அவர் மொத்தம் 35 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்டார்.

மற்ற கட்சிகளும் அதிக தொகுதிகள் கேட்டன. நேற்று இரவு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் அனைத்து கட்சிகளும் விட்டுக்கொடுத்து போகும்படி அமித் ஷா கேட்டுக்கொண்டார்.

பீகார் முழுக்க பட்டியலின வாக்காளர்கள் 6 சதவீதம் பேர் இருப்பதால் சிராக் பஸ்வானை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று கருதி அவருக்கு கடந்த முறை கொடுக்கப்பட்ட அதே 29 தொகுதியை இம்முறையும் கொடுத்துள்ளதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 52 முதல் 55 தொகுதிகள் வரை கொடுக்க தயாராக இருப்பதாக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் தங்களுக்கு 60 தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறது. லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கோர்ட் விசாரணைக்காக டெல்லி வந்துள்ளனர். டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் ராகுல் காந்தியை தேஜஸ்வி யாதவ் சந்தித்து பேசி தொகுதி பங்கீட்டை இறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு முதல்வர் வேட்பாளர் தொடர்பாகவும் பேசி முடிவு செய்ய தேஜஸ்வி யாதவ் திட்டமிட்டுள்ளார். வரும் 15ம் தேதிக்குள் தொகுதி பங்கீடு முடிந்துவிடும் என்று கூட்டணி கட்சியான விகாஷீல் இன்சான் கட்சி தலைவர் முகேஷ் சஹானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில்,”மல்லிகார்ஜுன் கார்கே தொகுதி பங்கீடு குறித்து அனைத்து கட்சிகளுடனும் பேசி வருகிறார். புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்திருப்பதால் தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்”என்று தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ರೌಡಿ sahacharaninda ಜೀವ ಬೆದರಿಕೆ: cm ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಬೆಂಗಳೂರು,ನವೆಂಬರ್,11,2025 (www.justkannada.in): ಕುರುಬರ ಸಂಘದ ವಿಚಾರದಲ್ಲಿ ಭಾಗಿ ಆಗದಂತೆ ನನಗೆ...

‘MAHAN’ ವತಿಯಿಂದ ನ.14 ರಂದು ಮೈಸೂರಿನಾದ್ಯಂತ ಸರಣಿ ಉಚಿತ ಆರೋಗ್ಯ ಶಿಬಿರ

ಮೈಸೂರು,ನವೆಂಬರ್,12,2025 (www.justkannada.in): ವಿಶ್ವ ಮಧುಮೇಹ ದಿನಾಚರಣೆ ಅಂಗವಾಗಿ ನವೆಂಬರ್ 14...

ಇನ್ನರ್ ವೀಲ್ ನ ಧ್ಯೇಯವಾಕ್ಯವೇ ಸ್ನೇಹ ಮತ್ತು ಸೇವೆ- ಶಬರೀಕಡಿದಾಳು

ಹುಣಸೂರು, ನವೆಂಬರ್,12,2025 (www.justkannada.in): ಇನ್ನರ್ ವೀಲ್ ವಿಶ್ವದ ಅತಿದೊಡ್ಡ ಮಹಿಳಾ...

ಪೊಲೀಸರು ಶಿಸ್ತು ಹಾಗೂ ರಕ್ಷಣೆಯ ಪ್ರತೀಕ -ಬಿ.ಚೈತ್ರ

ಮೈಸೂರು,ನವೆಂಬರ್,12,2025 (www.justkannada.in): ಪೊಲೀಸ್ ಎಂದರೆ ಶಿಸ್ತು ಹಾಗೂ ರಕ್ಷಣೆಯ ಪ್ರತೀಕ....