18
March, 2026

A News 365Times Venture

18
Wednesday
March, 2026

A News 365Times Venture

'அய்யாதான் குலதெய்வம்; பொறுப்பிலிருந்து விலகுகிறேன்' – வெடித்த மோதலுக்கிடையே முகுந்தன் திடீர் முடிவு

Date:

பாமக நிறுவனரான ராமதாஸ் இன்று காலை தைலாபுர தோட்டத்தில் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது அவரது மகனும் பாமகவின் தலைவருமான அன்புமணிக்கு எதிராக பல விஷயங்களையும் பேசியிருந்தார்.

அன்புமணி, ராமதாஸ்!

‘பாஜகவுடன் கூட்டணிக்கு செல்லாவிடில் நீங்கள் எனக்கு கொள்ளிதான் வைக்க வேண்டும் என அன்புமணி மிரட்டினார். பாஜகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என அன்புமணியும் சௌமியாவும் காலில் விழுந்து கேட்டனர்.’ என்றெல்லாம் பேசி அரசியல் களத்தை பரபரப்பாக்கி விட்டிருந்தார்.

நீரு பூத்த நெருப்பாக இருந்து வந்த ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் இப்போது முழுமையாக வெளியுலகுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில், இருவரின் மோதலுக்கும் தொடக்கப்புள்ளியாக இருந்த பாமக இளைஞரணி தலைவர் முகுந்தன் இப்போது அக்கட்சியிலிருந்து விலகுவதாக அன்புமணிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

முகுந்தன்
முகுந்தன்

மருத்துவர் அய்யா தான் குலதெய்வம்

‘பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 28.12.2024 ஆம் நாளில் நான் நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்றென்றும் எனது குலதெய்வம். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்.’ எனக் கூறியிருக்கிறார்.

ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மோதலுக்கு இடையே முகுந்தன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்,

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

'உயிரோடு தான் இருக்கிறேன்' – நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detail

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உயிரோடு இருக்கிறாரா... இல்லையா?- இது தற்போது ஈரான்...

100W ఫాస్ట్ చార్జింగ్, 165Hz హై రిఫ్రెష్ రేట్ తో వచ్చేస్తున్న OnePlus 15T..!

OnePlus 15T: కాంపాక్ట్ ఫ్లాగ్‌షిప్‌ స్మార్ట్‌ఫోన్ మార్కెట్లో మరో స్మార్ట్ ఫోన్...

JDS ಬಿಡುವ ಪ್ರಶ್ನೆಯೇ ಇಲ್ಲ- ಶಾಸಕ ಜಿ.ಟಿ ದೇವೇಗೌಡ

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,18,2026 (www.justkannada.in):  ನಾನು ಜೆಡಿಎಸ್ ಪಕ್ಷದಲ್ಲೇ ಇದ್ದೇನೆ. ಜೆಡಿಎಸ್ ಬಿಡುವ...

ആരെയൊക്കെ വധിച്ചാലും ഇറാന്‍ ദുര്‍ബലപ്പെടില്ല, വ്യക്തികളെ ആശ്രയിച്ചല്ല ആ സംവിധാനം നിലനില്‍ക്കുന്നത്: അരാഗ്ചി

ടെഹ്റാന്‍: യു.എസും ഇസ്രാഈലും ചേര്‍ന്ന് നടത്തുന്ന കൊലപാതകങ്ങള്‍ കൊണ്ട് ഇറാന്റെ ശക്തമായ...