22
March, 2026

A News 365Times Venture

22
Sunday
March, 2026

A News 365Times Venture

பெரம்பூரிலிருந்து பிரசாரம் தொடக்கம்; தொண்டர்களுடன் போட்டோ ஷூட்! – விஜய்யின் Election பிளான் என்ன?

Date:

சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை தவெக முகாம் முடுக்கிவிட தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே, முதற்கட்டமாக 100 வேட்பாளர்களை உறுதி செய்திருக்கும் விஜய், அடுத்தக்கட்டமாக வேக வேகமாக பிரசாரத்தை தொடங்க ஆயத்தமாகி வருவதாகவும் கூறுகின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

TVK Vijay

இதுதொடர்பாக பனையூர் வட்டாரத்தினர் கூறுகையில், ‘தலைவர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் அத்தனை பேரும் சென்னையிலுள்ள தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்திருக்கின்றனர். அதன்படி, தலைவர் அவர் போட்டியிட பெரம்பூர் தொகுதியை டிக் அடித்திருக்கிறார்.

வேட்பாளர்களை இறுதி செய்யும் வேலைகள் முடிவடையப் போகிறது.

அடுத்தக்கட்டமாக மக்களிடம் சென்று வாக்கு கேட்பதுதான் முக்கியப் பணி. அதற்காக தலைவர் தன்னுடைய பிரசாரத்தை பெரம்பூர் மற்றும் ஆதவ் போட்டியிடும் வில்லிவாக்கத்திலிருந்து தொடங்கும் முடிவில் இருக்கிறார். வருகிற 24 அல்லது 25 ஆம் தேதியில் பெரம்பூருக்கு தலைவரை அழைத்து வரும் பணிகளை நிர்வாகிகள் செய்துகொண்டிருக்கின்றனர்’ என்றனர்.

த.வெ.க - விஜய்
TVK – Vijay

மேலும் பேசியவர்கள், ‘அதுமட்டுமல்லாமல் மார்ச் 26 ஆம் தேதி 2000 க்கும் மேற்பட்ட வட்ட, ஒன்றிய நகராட்சி லெவல் நிர்வாகிகளை நேரில் அழைத்து அவர்களுடன் உரையாடி போட்டோ ஷூட்டும் நடத்தப் போகிறார். அடிமட்ட நிர்வாகிகள் உற்சாகமாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு’ என விவரித்தனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

`சிபிஎம் கட்சிக்கு 5 அல்லது 6 சீட்டுகளா?'- ஸ்டாலின் சொன்னது என்ன? – பெ.சண்முகம் பேட்டி

திமுக கூட்டணியில் தங்களுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி...

CM Revanth Reddy : మహిళా సంఘాలకు బంపర్ ఆఫర్.. ఇకపై అందరూ కోటీశ్వరులే.!

“ఎద్దు ఏడ్చిన వ్యవసాయం, రైతు ఏడ్చిన రాజ్యం బాగుపడదు” అనే నానుడిని...

ವಿಧಾನಸೌಧದ ನೂತನ ಮುಖ್ಯ ದ್ವಾರಕ್ಕೆ ಮಾ.25ರಂದು ಚಾಲನೆ ನೀಡಲಿರುವ ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ.

  ಮಂಗಳೂರು, ಮಾ.22: ರಾಜ್ಯ ರಾಜಕೀಯದ ಪ್ರತೀಕವಾಗಿರುವ ವಿಧಾನಸೌಧದ ನವೀಕೃತ ನೂತನ...

ഡി.എം.കെ.’വല്യേട്ടന്‍’ കളിക്കുന്നു; തെരഞ്ഞെടുപ്പിന് തൊട്ടുമുമ്പ് സഖ്യം ഉപേക്ഷിച്ച് തമിഴക വാഴ്‌വുരിമൈ കച്ചി

ചെന്നൈ: തമിഴ്‌നാട്ടില്‍ നിയമസഭാ തെരഞ്ഞെടുപ്പിന് തൊട്ടുമുമ്പായി നാടകീയമായി ഭരണസഖ്യമായ എസ്.പി.എ(സെക്യുലര്‍ പ്രോഗ്രസീവ്...