25
February, 2026

A News 365Times Venture

25
Wednesday
February, 2026

A News 365Times Venture

`பக்குவமானவர்; அவர் திமுக-வில் இணைந்தால் வரவேற்பேன்!' – ஓபிஎஸ் குறித்து திருமாவளவன்

Date:

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன்,

“அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கருணைத்தொகை பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடி தெரிவித்திருக்கிறார். தேர்தல் காலத்து வாக்குறுதிகள். வழக்கமான வாக்குறுதிகள். தி.மு.க ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் இந்த அறிவிப்பை செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இருந்தாலும்கூட இது தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தி.மு.க-க்கு எதிராக அ.தி.மு.க அறிவித்திருக்கிறது என்கிற புரிதல் மக்களுக்கு இருக்கும். எனவே, தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நிதி நிலைமை இப்படி இருக்கும் பொழுது இலவசம் அறிவித்தால் மாற்றத்தை தேடி மக்கள் செல்ல மாட்டார்களா என்று கேட்கிறீர்கள். இந்த கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது விடுதலை சிறுத்தைகள். கல்வி, மருத்துவத்தை தவிர வேறு எதனையும் இலவசமாக வழங்கக் கூடாது எனக் கூறியுள்ளோம். தி.மு.க மகளிரை மேம்படுத்துவதற்காக உரிமை தொகையாக வழங்குகிறது. சமூகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில், இருக்கிற அல்லது காலங்காலமாக வஞ்சிக்கப்பட்டு நிலையில் இருக்கின்ற அதிகாரம் இல்லாமல் இருக்கின்ற நிலையில்… அவர்களை மேம்படுத்தும் என்ற நிலையில் அந்த திட்டத்தை விடுதலை சிறுத்தை கட்சிகள் வரவேற்றது.

திருமாவளவன்

இதனால், ஏற்படுகிற நிதிச்சுமை என்பது சமாளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் இந்த நிலைப்பாட்டை தி.மு.க மேற்கொண்டு இருக்கிறது என்று நம்புகிறேன். கடந்த காலத்தில் கடுமையாக நிதி நெருக்கடி சூழ்நிலையிலும் இந்திய ஒன்றிய அரசு, மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி பங்கீட்டை ஒதுக்காமல் தவிர்த்துக்கூட, தமிழகத்தின் மொத்த உற்பத்தி GDP-யை உயரச் செய்து இருக்கிறது. திமுக அரசு, பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்து இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. மீண்டும் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று தி.மு.க ஆட்சி அமைக்கும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். ஒவ்வொரு கட்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள். தொகுதியைப் பொறுத்தவரை அதனை தற்போது கூற முடியாது. பார்க்கலாம் எது எப்படி இருந்தாலும் எங்கள் கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது எங்களுக்கான பொறுப்பு, கடமை. விமர்சனம் இருக்கலாம். ஆனால், எங்களது கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கும்.

தொகுதிப் பங்கீட்டில் எந்த சிக்கலும் இருக்காது. தி.மு.க கூட்டணி கல்லா பெட்டி கூட்டணி என்று விஜய் தெரிவித்துள்ளார் என்பது பற்றி கேட்கிறீர்கள். இந்த கேள்விக்கு விஜய் தலைமையான கட்சியினர்தான் பதில் கூறவேண்டும். ஓ.பன்னீர்செல்வம் மிகவும் உறுதியானவர். சகிப்புத்தன்மை உள்ளவர். சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் பக்குவம் அவரிடத்தில் உண்டு. விட்டு கொடுத்துப் போகும் இடத்தில் அவர் இருக்கிறார். அ.தி.மு.க-வில் மீண்டும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். ஆனால், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கு ஏன் முன்வரவில்லை என்று விளங்கவில்லை. அவர், தி.மு.க-வில் இணைந்தால் அதை வரவேற்கிறேன்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முதல்வர் ஸ்டாலின் பத்திரிகை வாசிக்க, ஆமோதித்த அழகிரி; கலைஞர் குடும்பத்தில் களைகட்டிய விசேஷம்!

பிப்ரவரி 22 சென்னையில் நடந்த முதல்வர் வீட்டு விசேஷத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும்...

Railway ALP Recruitment 2026: పది పాసైతే చాలు.. 11,127 అసిస్టెంట్ లోకో పైలట్ పోస్టులు మీవే.. పూర్తి వివరాలు

రైల్వేలో ఉద్యోగాల జాతర కొనసాగుతోంది. ఇటీవలే ఆఆర్బీ గ్రూప్ డీ...

ಖಾಲಿ ಹುದ್ದೆಗಳ ಭರ್ತಿಗೆ ಹೋರಾಟ: ಜಿಲ್ಲಾಧಿಕಾರಿಗಳ ಮನವೊಲಿಕೆಗೂ ಬಗ್ಗೆದ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳು

ಧಾರವಾಡ,ಫೆಬ್ರವರಿ,24,2026 (www.justkannada.in): ರಾಜ್ಯದಲ್ಲಿ ಖಾಲಿ ಇರುವ ಹುದ್ದೆಗಳ ಭರ್ತಿಗೆ ಆಗ್ರಹಿಸಿ...

കേരളത്തില്‍ ശക്തമായ മഴ തുടരും; ഇന്ന് രണ്ട് ജില്ലകളില്‍ യെല്ലോ അലേര്‍ട്ട്

തിരുവനന്തപുരം: സംസ്ഥാനത്ത് ശക്തമായ മഴ തുടരും. ഇന്ന് (ചൊവ്വ) രണ്ട് ജില്ലകളില്‍...