21
February, 2026

A News 365Times Venture

21
Saturday
February, 2026

A News 365Times Venture

Tariff: 'அதிகாரத்தை மீறி.!' – வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் – 'அவமானம்'?

Date:

உலக நாடுகளையே ஆட்டிப் படைத்த அஸ்திரம் அமெரிக்க அதிபர்‌ ட்ரம்பின் ‘பரஸ்பர வரி’.

இந்த வரிகளை அவர் அமெரிக்காவின் ‘சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)’-ன் கீழ் அமலுக்கு கொண்டு வந்தார்.

இதில் உலக நாடுகளின் அதிருப்தியை தாண்டி, உள்நாட்டிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இது அமெரிக்க வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று நீதிமன்ற படிகளில் அவர்கள் ஏறினர்.

‘ட்ரம்ப் விதித்த வரி செல்லாது’ என்று அமெரிக்காவின் ஃபெடரல் நீதிமன்றம் முன்பே தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது ட்ரம்ப் தரப்பு.

அமெரிக்க உச்ச நீதிமன்றம்

தீர்ப்பு என்ன?

அந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. அதில் 6 – 3 என்கிற விகிதத்தில் 6 நீதிபதிகள் ட்ரம்பின் வரிக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “மக்களின் பாக்கெட்டுகளுக்குள் நுழையும் அதிகாரம் காங்கிரஸிற்கு (அமெரிக்க நாடாளுமன்றம்) மட்டுமே உள்ளது. வரி விதிக்க நிர்வாகிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

ட்ரம்ப் தனது அதிகாரத்தைத் தாண்டி வரி விதித்து இருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இதுவரை ட்ரம்பின் பரஸ்பர வரியால் அமெரிக்காவின் கருவூலத்தில் 133 பில்லியனுக்கும் மேற்பட்ட டாலர்கள் சேர்ந்திருக்கின்றன.

இருந்தாலும் ஒரு ‘செக்’

இவை வசூலிக்கப்பட்ட நாடுகளிடையே திரும்பக் கொடுக்கப்பட்டு விடுமா என்றால் அங்கே தான்‌ ஒரு செக் உள்ளது.

நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை யாரேனும் அமெரிக்காவிற்கு எதிராக பின்பற்றினால், வர்த்தக சட்டம், 1974-ன் கீழ், பிரிவு 301-ல் அதிபரால் வரி விதிக்க முடியும்.

நாட்டின் பாதுகாப்பு அடிப்படையில், வர்த்தக விரிவாக்குதல் சட்டம், பிரிவு 232-ன் கீழ் வரி விதிக்க முடியும்.

இந்த இரண்டு துருப்புச் சீட்டுகளையும் ட்ரம்பின் அரசு பயன்படுத்த உள்ளதாம்.

ட்ரம்ப் - வரி
ட்ரம்ப் – வரி

ஏற்கெனவே, உலக நாடுகள் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கின்றன… சில நாடுகள் அமெரிக்காவிற்குள் போதைப் பொருள்களை ஏற்றுமதி செய்கின்றன என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் ட்ரம்ப்.

அந்தத் துருப்புச் சீட்டுகளுக்கு இந்தக் காரணங்கள் கூட பயன்படுத்தப்படலாம்.

லாஸ்ட்… பட் நாட் லீஸ்ட்… அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ட்ரம்பின் ரியாக்ஷன்…

இப்போது அமெரிக்க நேரப்படி, பிப்ரவரி 20-ம் தேதியின் காலை. சில ஆளுநர்களுடன் தற்போது ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ‘அவமானம்’ என்று தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது..

இனி ட்ரம்பின் அடுத்த நகர்வு என்னவாக இருக்குமோ?!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

അടിതെറ്റി ട്രംപ്; ഇന്ത്യയടക്കമുള്ള രാജ്യങ്ങള്‍ക്ക് തീരുവ വര്‍ധിപ്പിച്ച നടപടി റദ്ദാക്കി സുപ്രീം കോടതി

വാഷിങ്ടണ്‍: അമേരിക്കന്‍ പ്രസിഡന്റ് ഡൊണാള്‍ഡ് ട്രംപ് കഴിഞ്ഞ വര്‍ഷം ഇന്ത്യ അടക്കമുള്ള...

திமுக கூட்டணியில் 'ஹவுஸ்புல்' – தொகுதிப் பங்கீட்டில் ஸ்டாலினுக்குக் காத்திருக்கும் சவால் என்ன?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தடபுடலாக தயாராகி கொண்டிருக்கின்றன.பேரணி, பிரசாரம்,...

Off The Record : బెజవాడ ఎంపీ సీట్లో ఈసారి గేమ్‌ మార్చబోతున్న వైసీపీ?

విజయవాడ ఎంపీ సీటు విషయంలో వైసీపీ గేమ్‌ మార్చాలనుకుంటోందా? ఇప్పటిదాకా ఒక్కసారి...

ಸ್ನೇಹಮಯಿ ಕೃಷ್ಣ ಬಂಧನ: ಸರ್ಕಾರದ ವಿರುದ್ದ ಆರ್.ಅಶೋಕ್ ಕಿಡಿ

ಬೆಂಗಳೂರು,ಫೆಬ್ರವರಿ,20,2026 (www.justkannada.in):  ಮುಡಾ ಪ್ರಕರಣದ ದೂರುದಾರ ಸಾಮಾಜಿಕ ಕಾರ್ಯಕರ್ತ ಸ್ನೇಹಮಯಿ...