12
March, 2026

A News 365Times Venture

12
Thursday
March, 2026

A News 365Times Venture

'இணைப்பு இருக்கிறதே தவிர பிணைப்பு இல்லை'- விசிக தலைவர் திருமாவளவன்

Date:

மதுரை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 30) திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். 

அப்போது திருமாவளவனிடம் அதிமுக- பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருகிறது. அதற்கு பதலளித்த அவர், “ அமித்ஷா மட்டும் திரும்ப, திரும்ப அதிமுகவுடன் கூட்டணி என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

பாஜக – அதிமுக கூட்டணி

இதுவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்து பெரிதாக ஒன்றும்  சொல்லாமல் மௌனம் காத்துவருகிறார் என்று நான் சொல்லி இருந்தேன்.

அவர் அதற்கு அளித்திருக்கும் பதில் பாஜகவிற்கு தான் என்று புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது.

அதாவது, ‘கூட்டணி ஆட்சி இங்கு இல்லை. அதிமுக அதற்கு உடன்படாது’ என்கிற விடையை பாஜகவிற்குதான்  சொல்லி இருக்கிறார் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

அதேபோல அதிமுகவை எந்த கொம்பன்னாலும்  கபளீகரம் செய்ய முடியாது என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார். 

கபளீகரம் செய்வதற்கு யார் முயற்சி செய்கிறார்கள் என்பதையும் அவர் தெளிவுப்படுத்த வேண்டும். அதிமுகவை திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கபளீகரம் செய்ய வாய்ப்பில்லை.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

அப்படி ஒரு முயற்சியை மேற்கொள்ளவும் முடியாது. உடன் இருக்கும் கட்சிகளால் மட்டும்தான் விழுங்கிச் செரிக்கிற முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.

ஆகவே அந்தக் கருத்தை பாஜகவிற்கு எதிராகச் சொல்லி இருக்கிறார் என்று உணர்ந்துகொள்ள முடிகிறது.

எனவே பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் இடையில் ஒரு இணைப்பு இருக்கிறதே தவிர பிணைப்பு இல்லை என்பதைப் புரிந்துக்கொள்ள முடிகிறது” என்று திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಜೋಡಿ ಕೊಲೆ:  ಅರೋಪಿಗೆ ಜೀವಾವಧಿ ಶಿಕ್ಷೆ, ದಂಡ ವಿಧಿಸಿದ ಮೈಸೂರು ಕೋರ್ಟ್

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,11,2026 (www.justkannada.in): ಜಮೀನಿನಲ್ಲಿ ವ್ಯವಸಾಯ ಮಾಡುವ ವಿಚಾರಕ್ಕೆ ಸಂಬಂಧಿಸಿದಂತೆ ತನ್ನ...

അമിത് ഷാ ചര്‍ച്ച ചെയ്യേണ്ടത് സ്പീക്കറുടെ ഭരണഘടനാവിരുദ്ധമായ പെരുമാറ്റം; രാഹുല്‍ ഗാന്ധിയെ കുറിച്ചല്ല: കെ.സി. വേണുഗോപാല്‍

ന്യൂദല്‍ഹി: ആഭ്യന്തരമന്ത്രി അമിത് ഷാക്കെതിരെ രൂക്ഷവിമര്‍ശനവുമായി എ.ഐ.സി.സി ജനറല്‍ സെക്രട്ടറി കെ.സി....

`4 தொகுதிகள்; 3-ல் உதயசூரியன் சின்னம்' – மதிமுக-வை சரிகட்டிய திமுக!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தி.மு.க கூட்டணிக்குள் வேகமெடுக்க...

American Airlines: జస్ట్ 30 సెకన్లు హెడ్‌ఫోన్స్ లేకుండా వీడియో ప్లే.. ఎయిర్‌లైన్స్ రూల్స్ బ్రేక్ చేసిన మహిళకు షాక్

అమెరికన్ ఎయిర్‌లైన్స్ ఫ్లైట్‌లో హెడ్‌ఫోన్స్ లేకుండా వీడియో ప్లే చేసిన మహిళను...