26
March, 2026

A News 365Times Venture

26
Thursday
March, 2026

A News 365Times Venture

`பாஜக கூட்டணியால் அதிமுக-வில் இருந்து நான் விலகுகிறேனா?' – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Date:

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஏப்ரல்14) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுக பாஜக-வின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது, என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்திருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி அமைந்தால் நான் கட்சியில் இருந்து விலகுவதாகத் திருமாவளவன் அவருடைய கருத்தைக் கூறியிருக்கிறார். இது திட்டமிட்டுப் பரப்பப்பட்ட வதந்தி. நினைத்துக்கூட பார்க்க முடியாத இந்த செய்தியை பரப்பி வருகின்றனர்.

ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர்

எங்களின் குடும்பம் 75 ஆண்டுக்காலம் திராவிட பாரம்பர்யம் கொண்டது. தன்மானத்துடன் வளர்ந்த குடும்பம். பதவிக்காக யாருடைய வீட்டு வாசலிலும் நின்றதில்லை.

எங்களின் குடும்பத்தை அ.தி.மு.க., அடையாளம் காட்டியது. அந்தஸ்தை கொடுத்தது. என்னை அடையாளம் காட்டியது, அ.தி.மு.க.,வும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவும் தான்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பதவிக்காக ஜெயக்குமார் யார் வீட்டு வாசலிலும் நின்றதில்லை.அ.தி.மு.க., தான் என்னுடைய உயிர்மூச்சு” என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எம்.ஜி.ஆருக்கு முன் தமிழக சட்டமன்றம் சென்ற முதல் நடிகர்; யார் தெரியுமா?

திரைத்துறையிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்குச் சென்ற முதல் நபர் என்றவுடன் நம் நினைவுக்கு...

Yadadri: భార్యపై కోపం.. కన్న కూతురిని పొట్టన పెట్టుకున్న కసాయి తండ్రి..

ఆ చిన్నారికి రెండేళ్లకే నూరేళ్లూ నిండిపోయాయి. కన్న తండ్రి ఘాతుకానికి బలైంది....

ಗುಣಮಟ್ಟ ನಮೂದಿಸುವ, ಐಎಸ್‌ ಐ, ಹಾಲ್ ಮಾರ್ಕ್ ಗುರುತಿರುವ ವಸ್ತುಗಳನ್ನು ಖರೀದಿಸಿ-ಎ.ಕೆ ನವೀನ ಕುಮಾರಿ

ಮೈಸೂರು, ಮಾರ್ಚ್, 25,2026 (www.justkannada.in): ಗ್ರಾಹಕರು ಆಹಾರ, ಚಿನ್ನ ವಸ್ತುವನ್ನು...

യുദ്ധം അവസാനിപ്പിക്കാന്‍ അഞ്ച് നിബന്ധനകള്‍; യുദ്ധം എപ്പോള്‍ അവസാനിപ്പിക്കണമെന്ന് തീരുമാനിക്കുന്നത് ട്രംപ് ആയിരിക്കില്ല: ഇറാന്‍

ടെഹ്‌റാന്‍: അമേരിക്കന്‍ പ്രസിഡന്റ് ഡൊണാള്‍ഡ് ട്രംപിന്റെ നേതൃത്വത്തില്‍ മുന്നോട്ടുവെച്ച സമാധാന നിര്‍ദേശം...